சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருமாள் கண்மாய் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் உண்டாகிறது. இதனால் கண்மாயின் நீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.