தர்மபுரி பிடமனேரி குடியிருப்பு பகுதியையொட்டி பிடமனேரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பைகளில் ஒரு பகுதி ஏரி நீரில் கலந்து விடுகிறது. இதேபோல் ஏரி நீரில் ஆகாயத்தாமரைகள், செடிகளும் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. எனவே ஏரி நீரின் சுகாதாரத்தை பராமரிக்க அதில் குப்பைகளையும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?