நெய்க்காரப்பட்டியை அடுத்த சர்க்கரை கவுண்டன்குளம் பகுதியில் கொழுமம் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைப்பதால் எழும் புகைமூட்டம் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் குப்பை மேலாண்மை செய்வதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.