விழுப்புரம்-புதுச்சேரி சாலை காந்தி சிலை அருகே சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.