போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி

Update: 2023-02-26 10:28 GMT

போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி

திருப்பூர் சபாபதிபுரம் டி.எம்.எப். பாலம் அருகில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான இருசக்கர மற்றம் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இப்படிபட்ட நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குப்பை தொட்டி நடுரோட்டில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன கருதி குப்பைத்தொட்டியை மாற்று இடத்தில் வைக்க வேண்டும்

தீபக்டேனியல், சபாபதிபுரம்.

80151 67580

-----------

மேலும் செய்திகள்