குப்பை தொட்டி இடம் மாற்றப்படுமா?

Update: 2023-02-19 17:05 GMT

தர்மபுரி வெண்ணம்பட்டி ரெயில்வே கேட் பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இங்குள்ள ஆசிரியர் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அந்த சாலைகளில் செல்லும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே இந்த குப்பை தொட்டியை இந்த பகுதியில் இருந்து அகற்றி பொது மக்களுக்கு இடையூறு இல்லாத பகுதியில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்