புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி இல்லை. இதனால் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி அமைப்பதோடு, கொட்டப்படும் குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.