சேலம் இரும்பாலை மெயின் ரோடு சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி அரசு மோகன் குமாரமங்கலம் கல்லூரி அருகில் சாலை ஓரம் ஆடு மற்றும் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரமாக கொட்டிச் செல்கிறார்கள். நீண்ட நாட்கள் ஆகியும் அதை சுத்தம் செய்யவில்லை. அப்படி சுத்தம் செய்தாலும் அந்த குப்பைகளை சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி குப்பைகளை போட்டு குழியை மூடிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவவடிக்கை எடுப்பார்களா?