மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு 15-வது வார்டு பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கபடாமல் உள்ளது. இதனால் முக்கிய வீதிகளில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில்தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.