பெங்களூரு லிங்கராஜாபுரம் பழைய பாகலூர் லேஅவுட் சாலையில் ஹென்னூர் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகே அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் தற்போது அந்த பகுதியில் மலைபோல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அந்த கழிவுகள் சாலைகளில் சிதறி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்றவும், அங்கு மீண்டும் குப்பை கழிவுகள் வீசாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.