திண்டுக்கல்லை அடுத்த பள்ளபட்டியில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிக அளவு கொட்டப்படுகிறது. மேலும் அந்த குப்பைகளை மர்மநபர்கள் தீவைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குப்பைகளில் இருந்து வரும் புகையால் மூச்சுவிடமுடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல் அக்கம்பக்கத்தினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுவோர் மற்றும் தீவைத்து எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.