புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் கிராமத்தில் தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.