திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் லட்சுமாங்குடி முதல் தோட்டச்சேரி வரை சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை சிறிய அளவிலான தொட்டிகளாக உள்ளன. இதனால் குப்பைகள் தொட்டியில் இருந்து வெளியே சிதறி சாலையோரத்தில் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைத்தொட்டிகளும் தேவையான இடங்களில் வைக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?