பெங்களூரு புலிகேசிநகர் புரோமினட் ரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. அந்த ஆஸ்பத்திரி எதிரே இரவு நேரத்தில் மர்மநபர்கள் குப்பை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை குவிந்து கிடக்கிறது. இது ஆஸ்பத்திரிக்கு வருபவர்களை முகம் சுழிக்க வைப்பதுடன், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழிவகுத்து உள்ளது. ஆஸ்பத்திரி எதிரே குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?