தர்மபுரி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் ஒரு பகுதி நகராட்சி பள்ளியின் கிழக்கே உள்ள நுழைவுவாயில் அருகே கொட்டப்படுகிறது. பின்னர் அவை பிரித்து வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்படுகிறது. சில நாட்களில் சேகரித்து கொண்டு வரப்படும் குப்பைகளை அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தேங்கும் குப்பைகளால் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை சேகரிக்கும் பணியை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?