சென்னை சூளைமேடு பாரதியார் தெருமுனை சந்திப்பில். சுற்றியுள்ள அனைத்து தெருக்களின் குப்பைகளும் ஒரே இடத்தில் போடப்படுகிறது. இவ்வாறு போடப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் அப்பகுதி முழுவதும் குப்பைகள் சிதறி காட்சியளிக்கிறது. மேலும் அதிலிருந்து துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காணும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.