பழனி அடிவாரம் இடும்பன்கோயில் சாலைப் பகுதியில் பல இடங்களில் முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை. இதனால் சாலையோரம் இளநீர் கூடுகள் மற்றும் மக்கும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் நிலவுகிறது. நகராட்சி மற்றும் கோவில் அதிகாரிகள் சார்பில் குப்பைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.