பொள்ளாச்சி நகராட்சியில் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பலரும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனி தனியாக பிரித்து கொடுப்பதில்லை. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.