மயிலாடுதுறை தாலுகா மயிலாடுதுறை துலா கட்டணத்தில் இருந்து நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பின் புறத்தில் உள்ள பாதையில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் பின் புறத்தில் உள்ள பாதையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.