கோபி அருகே பச்சைமலைக்கு செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் மழை பெய்யும் போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் அதே வீதியில் 3 இடங்களில் குப்பைகள் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற ஆவன செய்வார்களா?