கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின்ரோடு செரும்புபள்ளம் பாலத்தின் கீழ் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நீரோட்டம் தடைபட்டு உள்ளதோடு தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதனால் புதர் செடிகள் வளர வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நீரோடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.