பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-16 16:38 GMT

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதியில் டீக்கடைகள், பலகாரக் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தார்சாலை ஓரத்தில் நெடுகிலும் கொட்டி வருகின்றனர். அதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பல்வேறு கழிவுகளையும் தார்சாலை ஓரத்தில் நெடுகிலும் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்