கோபியில் கருக்கம்பாலி ரோட்டில் இருந்து பச்சை மலைக்கு செல்லும் ரோட்டின் ஓரமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்றி வீசும்போது அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது குப்பை தூசிகள் விழுகின்றன. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.