பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை முகம்மது கார்டன் செல்லும் வழியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.