அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் புதுக்காடு செல்லும் சாலையில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது குப்பை தூசிகள் விழுகின்றன. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.