பன்றிகள் தொல்லை

Update: 2022-07-16 13:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பஸ் நிலையத்தின் பின்புறம், சன்னதி தெரு ,வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம், மேலவீதி, கீழவீதி, கடைத்தெரு, பெருமாள்கோயில்தெரு, அபிஷேககட்டளை, ஒடக்கரை, பிச்சகட்டளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடை, குப்பைகள் மற்றும் கழிவுநீரில் புரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், பன்றிகள், சாலையில் நடந்து செல்பவர்கள், குழந்தைகளை அவ்வபோது விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்