நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அவ்வபோது மர்மநபர்களால் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கொள்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வெளியேறும் புகையினால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் உடல்நலக்குறைவடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்கவும், குப்பை கிடங்கை குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு மாற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?