மயிலாடுதுறை நகர பகுதியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை கேணிக்கரையில் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதுமட்டுமின்றி வடிகாலில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி வடிகாலில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகாலில் உள்ள குப்பைகளை அகற்றி கழிவுநீர் வடிந்தோட வழிவகை செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?