சென்னை மயிலாப்பூர் லஸ் சாலை சந்திப்பு மதுரா கார்டன் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் மதுக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்றவும், இது போன்று மதுக்கழிவுகள் இங்கே கொட்டப்படாமல் இருப்பதற்கும் தீர்வு காண வேண்டும்.