உப்பள்ளி-தார்வார் இரட்டை மாநகரில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் உப்பள்ளி பஸ் நிலையம் அருகே குப்பை கழிவுகள் மலை போல குவிந்து கிடக்கிறது. அந்த குப்பை கழிவை பன்றிகள் கிளறுகின்றன. இதனால் குப்பை கழிவில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. குப்பை கழிவை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.