ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் முத்து ரகுநாதபுரம் அருகில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் மற்றும் விஷ பூச்சிகள் அதிலிருந்து வரக்கூடியதாகவும் இருக்கின்றது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.