கோவை பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் ஓடுவது தடைபட்டு கிடக்கிறது. மேலும் குப்பைகள் நிறைந்து, கால்வாய் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.