குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-25 15:01 GMT

ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து தொட்டம்பட்டிக்கு செல்லும் ரோட்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது குப்பை தூசிகள் விழுந்து விடுகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்