தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி எதிரில் எஸ்.வி.ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து இருந்தது. இந்த குப்பைகளை சிலர் தீ வைத்து எரித்து வந்ததால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் குவிந்திருந்த குப்பைகள் மற்று குப்பைகள் கொட்டப்பட்டிருந்த மண்மேடு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-முருகன், தர்மபுரி.
-முருகன், தர்மபுரி.