சுல்தான்பேட்டை வட்டாரத்தில் குளம், குட்டைகள், சிறு தடுப்பணை என 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.