தர்மபுரி அன்னை சத்யா நகரில் இருந்து பிடமனேரி செல்லும் தார் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இந்த சாலையோரத்தில் சில இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இவை சாலையிலும் பரவி விடுவதால் இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.