கோவை ஒண்டிப்புதூர் நாராயணசாமி நகர், ஆர்.கே.நகர், வசந்தம் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் குப்பைகளை கொட்ட சிறுவர் பூங்கா பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென அந்த குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கிறார்கள். மேலும், குப்பைகள் தற்போது மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, குப்பை தொட்டி வைக்க முன்வரவேண்டும்.