தர்மபுரி நகரின் மைய பகுதியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இங்கு விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ளவும், நடைபயிற்சியில் ஈடுபடவும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த வளாகத்தில் உள்ள மைதானத்தின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க குப்பை தொட்டிகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், தர்மபுரி.