புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கீரனூர் -விராலிமலை சாலையோரம் பேராம்பூருக்கும், ஆம்பூர்பட்டி நால்ரோட்டிற்கும் இடையே அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதில் டீக்கடை மற்றும் பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்படும் காலி பால் பாக்கெட் அதிக அளவில் உள்ளது. இதை அந்த கடைக்காரர்கள் சாலையோரம் கொட்டி செல்வதால் அவை காற்றில் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த காலி பால் பாக்கெட் கழிவுகளை ஆடு மாடுகள் தின்று உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.