பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் 2-வது செக்டாரில் இருந்து மடிவாளா ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள நடைபாதைகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. நடைபாதையில் கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நடைபாதையில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?