தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு உள்ள சாலையையொட்டி கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உருவாகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.