கடலூர் முதுநகர் 45-வது வார்டு பகுதியில் உள்ள குப்பை தொட்டி கவிழ்ந்து கிடப்பதோடு, குப்பைகள் அனைத்தும் அருகில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே 45-வது வார்டு பகுதியில் உள்ள குப்பை தொட்டியை சரியாக எடுத்து வைப்பதுடன், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.