குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-09-12 12:43 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து சென்று வருகின்றனர். இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் குத்தாலம்

மேலும் செய்திகள்