கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் குப்பைகள் ஆற்றில் விழுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.