சுகாதார சீர்கேடு

Update: 2022-09-10 17:23 GMT

தர்மபுரி பிடமனேரி ஏரியின் வடக்கு கரையையொட்டி செல்லும் தார் சாலை தர்மபுரி- சேலம் நான்கு வழி சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் ஏரிக்கரையையொட்டி குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதை சிலர் தீ வைத்து எரிப்பதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், தர்மபுரி.

மேலும் செய்திகள்