மயிலாடுதுறை மாவட்டம் திருவழந்தூர் நால்கால் மண்டபம் காவிரி கரையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தின் அருகில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த இடத்தில் தனியாருக்கு சொந்தமான பழுதான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியை சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். மதுக்குடிப்பவர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை அங்கே போட்டு விட்டு சென்று வருகின்றனர். ஒரு சிலர் பாட்டில்களை உடைத்து விட்டும் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.