பொது இடங்களில் தேங்கும் குப்பைகள்

Update: 2022-09-09 13:07 GMT

கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொது இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பைகளில் உள்ள பொருட்களை உண்பதற்காக கால்நடைகள் ,நாய்கள் வருகின்றன. இவை சாலையின் குறுக்கே அடிக்கடி ஓடுவதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுஇடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க குப்பை தொட்டி வைக்கவும், தேங்கும் குப்பைகளை உடனே அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்