சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-08 12:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் முதல் கோமல் வரை செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் தொழுதாலங்குடி ஊராட்சி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதும், அதனை தீ வைத்து எரிப்பதுமாக உள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்