நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தாய்மான குட்டையில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் வீடுகள், கடைகளில் சேகரிக்கும் குப்பைகளை அந்த குட்டையில் கொட்டப்படுகின்றது. அதில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள இடங்களுக்கும் பரவுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூமிஷ், நாமக்கல்.