தினத்தந்திக்கு பாராட்டு

Update: 2022-09-05 16:18 GMT

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு நிலையம், கருவூல காலனி மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாலையில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக 'தினத்தந்தி' புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து இலக்கியம்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று அந்த பகுதியில் இருந்து குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ராகேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்